Tuesday, July 22, 2008

மரணம் பற்றி சில...

மரணம் பற்றி சில குறிப்புகள்...

இருவர் சுமந்ததை
நால்வர் சுமக்கும்
தருணம்.

***

பிணத்தின் முகம் பார்த்தும்
சலனப்படாத மனதை
கள்ளம் கபடமற்ற பாசத்தின்
கண்ணீர் கரைத்து விடுகிறது

***

அப்பன் சாவான்
மகன் சாவான்
பேரன் சாவான்
ஒரு தலைமுறையின்
மிகச் சிறந்த வரம் இது
முறை பிழற்தல்
முன் வினைச் சாபம்

***

இறுதி யாத்திரையில்
இறைவனை விளித்து
ஒற்றை கூக்குரல்
உடைகிறது நெஞ்சு
வலுவிழக்கின்றன கால்கள்

***

விடையனுப்பி
கழுவித் தள்ளிய
வீட்டில்
சம்மந்தி வீட்டார்
சாதம்
தவிர்க்க முடியாதது
வயிற்றின்
அமிலம்

***

விதி எத்தனயோ
வழி செய்திருக்கிறது
ஆனால்
என் வீட்டிலிருந்து
காட்டிற்க்கு
ஒரே வழி

***

எத்தனை தயாராய்
இருந்தாலும்
இது வலிதான்
இது துயரம்தான்

***

சிலர் சிலருக்கு
இறந்த பின்தான்
அறிமுகம் ஆகிறார்கள்

***

மயானத்தில் கூட
எல்லாரும் விட்டுப்
போனப்பின்தான்
அமைதி.
இப்போது வருகிறது
என் தூக்கம்.
***

Aishu - Pencil Sketch

Kailaasa Nathar - Temple - Pencil Sketch

Monday, July 21, 2008

Kirthi Reddy - Pencil Sketch

காதல் கவிதைகள்

உன் இமைகளை
படபடத்து
என்னுள் ஓர்
பிரளயம் நிகழ்த்தி
குழப்ப நிலை சித்தாந்தத்தின்
பட்டாம்பூச்சி விளைவுகளை
உறுதி செய்து
கொண்டிருக்கிறாய்


***

பெருமழை வெள்ளம் தேவையில்லை
ஆழ்கடல் அலைகள் தேவையில்லை
சுழன்று சுழன்று கவிழ்த்து விடும்
நதியின் வேகம் தேவையில்லை
அகன்று அகன்று இருக்கும்
உன் இருவிழிகள் போதும்
என்னை மூழ்கடிக்க...

***

உன் விழிகளைக்
கொஞ்சம் மூடி வை
நான் அவற்றை
இருளில் தியானிக்க
ஏதுவாய்

***

என்னுள் ஓயாத அலைகளை
உருவாக்கிவிட்டு
இப்போது அமைதியாய்
இரு என்கிறாய்.

***

பள்ளிக்கு தாமதமாகிவிட்ட
சிறுவன்
காலை நேர வாகன நெரிசலில்
சாலை கடக்கத் தவிப்பது
போலத் தவிக்கிறேன்
கைகோர்த்து வாழ்வு கடக்க
எப்பொழுதும் இரு
என் பக்கத்தில்

***

அனல் தகிக்கிறது உள்ளே
ஏக்கம் வெளியேறுகிறது
வெம்மை மூச்சாக.
எனக்காக வீசும்
காற்றுக்குத் தெரியும்
இது என்ன திசை என்று
எப்போது மழை கொண்டு
வரவேண்டுமென்று.

***

அமைதியாக போய் வா
கண்களில் வழியும்
உப்பு நீரை உலர வை...
கணவன் கேட்டால்
தூசி விழுந்ததாகச் சொல்...
நினைத்துக் கொள் என்னை
முடியும் போதெல்லாம்.

***

காகிதமும் பேனாவும்
இல்லாமல் ஏமாந்திருக்கும் நேரம்
பார்த்து வந்து போகும்
கவிதை வார்த்தைகளைப் போல
துன்புறுத்துகிறாய்.

வந்து போனாய் எனினும்
சந்தித்து போக
நீ காத்திருக்கவில்லை
என்பதற்க்கு எனக்கு ஏன் இத்தனை வருத்தம்?

Sunday, July 20, 2008

Tuesday, July 15, 2008

Monica Belluci - Pencil Sketch

Poem

நீரும் மோருமே
கிடைக்காத உலகில்
தேனும் தயிரும்
தோலில் பூசும் குறிப்புகள்
அழகு பெண்களுக்கு

Surely no offence meant to women. This is just a thought when i read a note to mix some cream of milk with almond pastes and few drops of honey; and on the same fine day I recieved a presentation on scarcity of food.